அப்பாடா, ஜெர்மனி தோற்றது !
நான் மிக மிக எதிர்பார்த்தது போலவே நேற்று இரவு நடைபெற்ற கால் பந்தாட்டத்தில் ஜெர்மனி இத்தாலியிடம் தோற்றுப் போனது ! அதே போல, தொடக்கத்திலிருந்தே முக்கி முக்கி ஆடிய பிரேசில் பிரான்ஸிடம் தோற்றதும் ஓரளவு எதிர்பார்த்தது தான் ! கால் இறுதியில் நடந்த மாதிரி, ஆட்டத்தை எப்பாடு பட்டாவது Penalty shoot out-க்கு இட்டுச் சென்று, அர்ஜெண்டினாவை வீழ்த்தியது போல இத்தாலியையும் வீழ்த்தி விடலாம் என்ற ஜெர்மானிய எண்ணத்தில் மண் !
மிகச்சிறப்பாக ஆடிய இத்தாலி அணி, எக்ஸ்ட்ரா வேளியின் கடைசி மூன்று நிமிடங்களில் இரண்டு அருமையான கோல்கள் போட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. பிரான்ஸ¤ம் இன்று போர்ச்சுகலை வென்று, இத்தாலியுடன் இறுதி ஆட்டத்தில் மோதினால், ஒரு மின்சாரப் பாய்ச்சி (ELECTRIFYING ;-)) ஆட்டத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இத்தாலியோ, பிரான்ஸோ யார் கோப்பையை வென்றாலும் மகிழ்ச்சியே !!!
ஜெர்மனி ஓரளவு திறமையாக ஆடினாலும், அவ்வணியின் ஆட்டம் பார்ப்பதற்கு ரசிக்கத் தக்கதாக இருப்பதில்லை. ஒரு "Set Pattern" வகை ஆட்டத்தையே தொடர்ந்து விளையாடியும், துளியும் கற்பனை இல்லா (Unimaginative) ஆட்ட யுக்தியை கடைபிடித்தும் வந்ததே, ஜெர்மன் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம் என்பது என் கருத்து.உலக கால்பந்து போட்டிகளில் இத்தாலி ஜெர்மனியிடம் ஒரு முறை கூட தோற்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஜெர்மனி ஓரளவு (மற்ற ஆட்டங்களை விடவும்) நன்றாகவே விளையாடியது. பெர்ட் ஸ்னைடர் இரு முறை, கோல் போடும் எளிமையான வாய்ப்புகளை நழுவ விட்டார் ! எக்ஸ்ட்ரா வேளியின் 27-வது நிமிடத்தில் கென்னாரோ கடூஸோ பிரமிக்கத்தக்க வகையில், கடினமான ஒரு கோணத்திலிருந்து, பந்தை இடது காலால் உதைக்க, சுழன்று சென்ற பந்து கோல் கம்பத்துக்கு வெளியே செல்வது போல் ஒரு பாவ்லா காட்டி விட்டு, கோல் போஸ்ட்டுக்கு உள்ளே இடது புற மேல் மூலையில் தஞ்சமடைந்ததும், ஜெர்மானியப் பார்வையாளர்களிடையே பேச்சு மூச்சில்லா ஒரு மயான அமைதி குடி புகுந்தது (ரொம்பப் பெரிய வாக்கியமோ :))
இத்தாலியர்களோ களிப்பின் உச்சத்தில் மிதந்தனர் ! ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில், ஒரு திறமையான PASS வாயிலாக வந்த பந்தை, டெல் பியரோ கோலடித்து "Execution of Germany"யை துல்லியமாக நிறைவு செய்தார் !!!
என்றென்றும் அன்புடன்
பாலா
9 மறுமொழிகள்:
// "Execution of Germany" //
:)))
எனக்கு போர்ச்சுகல் வரனும்னு ஆசைங்க! என்னதான் ரவுடிப்பயக மாதிரி ஆடினாலும் அந்த பேரு கேக்க நல்லா இருக்கு! :)
இளவஞ்சி,
ஒங்க பேர் கூடத் தான் நல்லா இருக்கு :))))
நன்றி.
பாண்டிச்சேரி , கோவா ஆட்டத்தில் பாண்டிச்சேரியை ஆதரிப்பதுதானே முறை ..
// ரவுடிப்பயக - பேரு கேக்க நல்லா இருக்கு! //
// ஒங்க பேர் கூடத் தான் நல்லா இருக்கு // புரியுது.. புரியுது...
வழக்கம்போல எனக்கு பன்னு! சரி விடுங்க! பைனல்ல ஃபிரான்ஸ் தான் ஜெயிக்கும். ஏன் சொல்லறேன்னா Zidane அண்ணாச்சிக்கு நம்ப ஹேர்ஸ்டைலு! :) ஹிஹி...
என்ன பெட்டு? :)))
இளவஞ்சி,
//
// ஒங்க பேர் கூடத் தான் நல்லா இருக்கு // புரியுது.. புரியுது...
வழக்கம்போல எனக்கு பன்னு! சரி விடுங்க!
//
ஜோக்காத் தான் சொன்னேன். தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நம்பறேன் !
//பைனல்ல ஃபிரான்ஸ் தான் ஜெயிக்கும். ஏன் சொல்லறேன்னா Zidane அண்ணாச்சிக்கு நம்ப ஹேர்ஸ்டைலு! :) ஹிஹி...
என்ன பெட்டு? :)))
//
எனக்கு Zidane யும் பிடிக்கும், உங்களையும் பிடிக்கும் :) எனக்கும் பிரான்சு தான் ஜெயிக்கணும், அதனாலே பெட்டுக்கு வரலை, வாத்தியாரே !!!
LL தாஸு,
//பாண்டிச்சேரி , கோவா ஆட்டத்தில் பாண்டிச்சேரியை ஆதரிப்பதுதானே முறை ..
//
நல்ல கற்பனை வளம்பா உங்களுக்கு, என்னமா யோசிக்கிறீங்க :)
என்றென்றும் அன்புடன்
பாலா
பாலா,
// தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு நம்பறேன் // அட ஏங்க நீங்க வேற?
// எனக்கும் பிரான்சு தான் ஜெயிக்கணும் // நடக்கும்..நடக்கும்... :)))
L-L-D-a-s-u,
கலக்கிட்டீங்க! இதைத்தான் சொல்லவந்து மேல அப்படி ஒளறி வைச்சிருக்கறேன்! :)))
இளவஞ்சி,
//கலக்கிட்டீங்க! இதைத்தான் சொல்லவந்து மேல அப்படி ஒளறி வைச்சிருக்கறேன்! :)))
//
பெரிய பரிசெல்லாம் வாங்கின நீங்களாவது, உளறுவதாவது !!!
I refuse to accept :)
//எனக்கு போர்ச்சுகல் வரனும்னு ஆசைங்க! என்னதான் ரவுடிப்பயக மாதிரி ஆடினாலும் அந்த பேரு கேக்க நல்லா இருக்கு! :)//
திண்டுக்கல் ,கருங்கல் ,வாராங்கல் போல நம்மூரு பேரா இருக்குண்ணு சொல்லுறீங்களா?
ஜோ / Joe,
Belated Thanks for your comments :)
Post a Comment